Wednesday, 30 May 2012

கோபிநாத் பவர் ஸ்டாரை அப்படி என்ன தப்பா கேட்டுட்டார்?


சீனிவாசன் என்கிற (பவர் ஸ்டார்) போலி மருத்துவரை  கோபிநாத் கேட்ட கேள்விகள் நியாயமாக தான் தெரிகிறது. ஆனால் இணைய உலகமே கோபிநாத்துக்கு எதிராக கொந்தளிக்கிறது.

நீங்களே பாருங்க இந்த வீடியோவை :




கோபிநாத் கேட்ட கேள்விகள் எதற்கும் சீனிவாசனிடம் பதில் இல்லை. அப்புறம் எப்படி அவரை சப்போர்ட் செய்றாங்கலோ தெரியலை !

ஆதரிக்கிறதுன்னா, எல்லாரும் சேர்ந்து ஆதரிக்கறதும், எதிர்த்தா எல்லாரும் சேர்ந்து எதிர்ப்பதும் பழ்க்கமாகிடுச்சோ?

செல்ல பிராணிகள்

செல்ல பிராணிகள் வளர்ப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அது யாருக்கும் இடைஞ்சல் இல்லை என்றால் மிகவும் சந்தோஷம். என் நண்பனும் நானும் ஒரு கடை வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது பயங்கரமாக ஒரு சத்தம். சத்தம் வந்த திசையை பார்த்தல் ஒரு 28 வயது உள்ள ஒருவர் மோட்டார் வண்டியில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். நானும் என் நண்பர்கள் எல்லோரும் சென்று அவருக்கு உதவி செய்தோம். காரணம் என்னவென்று கேட்டால் ஒரு நாய் வண்டிக்கு குறுக்கே வந்து விட்டது என்று சொன்னார். அது தெரு நாய் கூட இல்லை. ஒருவரின் சொந்த நாய் தான். நாயின் உரிமையாளர் அந்த நாய்க்கு சங்கிலி ஏதும் கட்டவில்லை. அவர் இப்படி செய்வதால் அந்த நாய் ரோட்டில் செல்பவர்களை துரத்தவும் செய்யும். இதை அவர் கண்ண்டுகொல்வதே இல்லை .

ஆனால் பாவம் அந்த மோட்டார் வண்டியில் வந்தவர் தான். அவருடைய செல் போன் உடைந்துவிட்டது. மோட்டார் வண்டியும் சேதம் ஆகி விட்டது. இதை அனைத்தையும் பார்த்துகொண்டிருந்த நாயின் உரிமையாளர் தனக்கும் இந்த பிரச்சனைக்கும் சம்மந்தமே இல்லாததுபோல் நின்றுகொண்டிருந்தார்.

வண்டியில் வந்தவரோ தன் கஷ்டத்தை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் சென்று விட்டார். நாய் வளர்ப்பவர்கள் தங்கள் வீட்டில் உங்கள் செல்ல பிராணி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பொது இடத்தில் மட்டுமாவது பாதுகாப்பாக சங்கிலியால் கட்டி கூட்டி செல்லலாம். இது உங்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

Friday, 11 May 2012

சென்னையில் ஏழு உலக அதிசயங்கள்

சென்னையில் ஏழு உலக அதிசயங்கள்  உங்களை வியக்கவும் மகிழவும் வைக்க வந்துள்ளது.
 
ஐலன்ட் கிரவுண்டில் நூறு நாட்கள் இவற்றை கண்டு களிக்கலாம். வார நாளில் மதியம் மூன்று மணி முதல் இரவு பத்து மணி வரையிலும் பார்க்கலாம். வார இறுதியில் காலை பதினோரு மணி முதல் இரவு பத்து மணி வரை காணலாம்.
 




 
 
 
 
 
தாஜ் மஹால், பிரமிட் இவை இரண்டும் அவசியம் காண வேண்டியவை.   தவற விடாதீர்கள் !

Thursday, 10 May 2012

மெட்ராஸ் தாதா ஆட்டம் ஆரம்பம்

சென்னை : இங்கு நடக்கும் விழாக்கள், அரசியல் மேடைகள்,   வித விதமான ஹோட்டல்கள், இன்னும் பல விஷயங்களை இங்கு எழுத உள்ளேன்.