Showing posts with label செல்ல பிராணி. Show all posts
Showing posts with label செல்ல பிராணி. Show all posts

Wednesday, 30 May 2012

செல்ல பிராணிகள்

செல்ல பிராணிகள் வளர்ப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அது யாருக்கும் இடைஞ்சல் இல்லை என்றால் மிகவும் சந்தோஷம். என் நண்பனும் நானும் ஒரு கடை வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது பயங்கரமாக ஒரு சத்தம். சத்தம் வந்த திசையை பார்த்தல் ஒரு 28 வயது உள்ள ஒருவர் மோட்டார் வண்டியில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். நானும் என் நண்பர்கள் எல்லோரும் சென்று அவருக்கு உதவி செய்தோம். காரணம் என்னவென்று கேட்டால் ஒரு நாய் வண்டிக்கு குறுக்கே வந்து விட்டது என்று சொன்னார். அது தெரு நாய் கூட இல்லை. ஒருவரின் சொந்த நாய் தான். நாயின் உரிமையாளர் அந்த நாய்க்கு சங்கிலி ஏதும் கட்டவில்லை. அவர் இப்படி செய்வதால் அந்த நாய் ரோட்டில் செல்பவர்களை துரத்தவும் செய்யும். இதை அவர் கண்ண்டுகொல்வதே இல்லை .

ஆனால் பாவம் அந்த மோட்டார் வண்டியில் வந்தவர் தான். அவருடைய செல் போன் உடைந்துவிட்டது. மோட்டார் வண்டியும் சேதம் ஆகி விட்டது. இதை அனைத்தையும் பார்த்துகொண்டிருந்த நாயின் உரிமையாளர் தனக்கும் இந்த பிரச்சனைக்கும் சம்மந்தமே இல்லாததுபோல் நின்றுகொண்டிருந்தார்.

வண்டியில் வந்தவரோ தன் கஷ்டத்தை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் சென்று விட்டார். நாய் வளர்ப்பவர்கள் தங்கள் வீட்டில் உங்கள் செல்ல பிராணி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பொது இடத்தில் மட்டுமாவது பாதுகாப்பாக சங்கிலியால் கட்டி கூட்டி செல்லலாம். இது உங்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும்.