தி.மு. க ஆட்சிக்கு வந்தால் சென்னையில் மேம்பாலங்கள் கட்டுவார்கள். அ.தி.மு. க வந்தால் ரோடில் ஒருபக்கத்தில் இருந்து மறு பக்கம் போக முடியாத படி தடுப்பு சுவர் கட்டுவார்கள் !
காய்கறிகள் விலை சென்னையில் உச்சத்தை எட்டி விட்டது. கேரட், பீன்ஸ் எல்லாமே கிலோ அறுபது ரூபாய் ! எப்ப விலை குறையுமோ தெரியலை
பள்ளிக்கரணை அருகே எரியும் புகையால் கடந்த ஒரு வாரத்தில் ஏராளமாய் பாதிப்பு. வாகனங்கள் மேடவாக்கம் வழியே போக முடியலை. வேலைக்கு செல்வோர் கூட சுத்தி கொண்டு போக வேண்டி உள்ளது. இது பற்றி புதிய தலைமுறை செய்தி சானல் தொடர்ந்து தினம் நிலவரம் சொல்லி வருவது பாராட்டுக்குரியது
கிண்டியில் பணி புரிவோருக்கு சில நேரம் காலை வேலைக்கு செல்லும் போது புது பிரச்சனை வரும். தலைவர்கள் மந்திரிகள் யாரும் விமான நிலையம் வந்தால் ரோடு மறிக்கப்பட்டு விடும். ரோடை கிராஸ் செய்ய முடியாது. அலுவலகத்துக்கு செல்ல சில மணி நேரம் தாமதம் ஆகிடும்
சென்னையில் வெய்யில் குறைய வில்லை. பல இடங்களில் தண்ணீர் கஷ்டம் ஆரம்பம் ஆகிடுச்சு. மழை வரும் வரை சென்னை வாசிகள் பாடு திண்டாட்டம் தான்.
****
இத்தகைய சென்னை செய்திகள் அவ்வப்போது பகிர உள்ளேன். இந்த தாதாவை ஆதரியுங்கள் நண்பர்களே !
No comments:
Post a Comment